தமிழ் சினிமாவினை பொறுத்தவரை கதாநாயகிகளிற்குள் தற்போது அதிக மகிழ்ச்சியில் இருப்பவர் அம்மணி ஸ்ரயா தான்.
“சிக்கு புக்கு” திரையிட தயாராகிய நிலையில் இருக்கிறது, அடுத்து இவர் ஜீவாவுடன் நடிக்கும் “ரவுத்திரம்” திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புக்கள் முடிவடைந்துவிட்டன. ஸ்ரயா நடிப்பில் தெலுங்கில் வெளியான “டொன் சீனு” சூப்பராக வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
இப்படி மட்டற்ற மகிழ்ச்சியிலிருக்கும் ஸ்ரயாவிற்கு புதிய மகிழ்ச்சியினை கொடுத்திருக்கிறார் “பயர்” புகழ் தீபா மேத்தா.
ஏற்கனவே தீபாமேத்தாவின் அண்ணனின் இயக்கத்தில் ஓர் ஆங்கில திரைப்படத்தில் ஸ்ரயா நடித்திருந்தார் ஆனாலும் சர்ச்சைகள் அற்ற அந்த திரைப்படத்தினை விநயோகிஸ்தர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
நிலமை இப்படி இருக்க தீபா மேத்தாவே அடுத்த சர்ச்சைமிகு கதையோடு தயாராகிவிட்டார்.
தான் தயாரித்தாலும் தனது இயக்கத்திற்கு இருக்கும் வரவேற்பு……