பிரபல்யங்களின் படங்கள் ரிலீசுக்கு தயாராகி அடுத்த கணமே அவர்கள் அடுத்து என்னபடத்தில் நடிக்கப்போகிறார்கள் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
அதிலும் சுப்பஸ்டாரை பொறுத்தவரை அடுத்தடுத்த தனது படங்களிற்கிடையில் பெரிய இடைவெளியே எடுத்துக்கொள்வார். தற்போது தயாராகியிருக்கும் எந்திரன் கூட ரஜினியின் முந்தய படமான குசேலர் திரைப்படத்தின் பின் இரண்டுவருட இடைவெளியில் வெளிவர இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலை இருக்கையில் எந்திரனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படம் என்ன என்பதுதான் இப்போ கோடம்பக்கத்தில் மிகப்பெரிய கேள்விக்குறி.
சத்தியம் முவீஸ் தயாரிப்பில் வெளிவந்து சக்கைபோடு போட்ட படம் தான் சூப்பஸ்டாரின் பாட்ஷா, அண்மையில் சத்தியம் முவீஸ் தயாரிப்பாளரன் பிள்ளையின் திருமணவீட்டில் கலந்துகொண்டிருந்த சுப்பஸ்டார் “இவரிற்கு நான் நிறையவே கடமைப்பட்டிருக்கிறேன் இவரால் மாத்திரமே பாட்ஷா போன்ற அக்ஷன், கொமஷியல் திரைப்படத்தை கொடுக்கமுடியும்” என பேசியிருந்தார்.
இதைதொடர்ந்து சகல மீடியாக்களும் ரஜினி சத்தியம் மூவீசிற்காக படம்பண்ணப்போகிறார், அதுவும் பாட்ஷா 2 பண்ணப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் போட்டிருந்தன,
ஆயினும் ரஜினியின் நெருங்கிய வட்டார தகவலின் படி எந்திரன் திரைப்படத்தை தொடர்ந்து தனது மகள் இயக்கிவரும் அனிமேஷன் திரைப்படமான “சுல்தான் தி வாரியர்” திரைப்படத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்போகின்றாராம்.
சௌந்தர்யாவின் திருமணமும் வரும் முன்றாம் திகதி நடைபெறவிருக்கிறது இதை தொடர்ந்து தன் தந்தைக்கான கடைமையினை செவ்வனே செய்து முடித்த திருப்தியில் தன் மனதிற்கு பிடித்த இமாச்சலத்திலிருக்கும் பாபா அச்சிரமத்தில் அதிக நாட்களினை செலவிட தீர்மானித்திருக்கின்றாராம்.
மொத்தத்தில் ரஜினி ஓய்வுபெறும் மனநிலைக்கு வந்துவிட்டதாகவே ரஜினியின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனாலும் சௌந்தர்யாவின் “சுல்தான் தி வாரியர்” வெளிவந்ததை அடுத்து தனது ஓய்வை பொரும்பாலும் சுப்பஸ்டார் அறிவிப்பார் என்றே…..
(மேலும் விபரங்களிற்கு இங்கே அழுத்தவும்)